தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடல் சீற்றம் காணப்படும் என்று விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி போன்ற அரபிகடல் பகுதிகளில் கடல் சீற்றம் முப்பது அடிவரை அலை எழுப்பி வருவதால் கடல் ஓரமாக வசிக்கும் மீனவர்கள் பீதியுடன் காணபடுகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்று விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்த்து. இந்நிலையில் இன்று அரபி கடல் பகுதியான வள்ளவிளை, நீரோடி, மார்த்தாண்டம் துறை போன்ற மீனவ கிராம பகுதியில் கடலில் முப்பது முதல் முப்பத்தைந்து அடிவரை ராட்சத அலைகள் எழுப்பிய வண்ணம் காணப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு கடல் சீற்றம் காரணத்தால் கடல் ஓரத்தில் இருந்த வீடுகள் இடிந்து பழுதடைந்து காணப்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்தது. கடலோர பகுதியில் வசிக்கும் மீனவர்கள் பீதியுடன் காணபடுகின்றனர்.
கடல் சீற்றம் காரணத்தால் இரயுமன்துறை முதல் நீரோடி வரை உள்ள 500 க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த மூன்று கிராமங்களை கடல் சீற்றத்திலிருந்து காப்பாற்ற தமிழக அரசு அறிவித்துள்ள 116 கோடி மதிப்பில் தூண்டில் வளைவுகள் பணிகளை உடனே துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.