முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து 3,499 கன அடியில் இருந்து 2,156 கன அடியாக குறைந்தது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் திறப்பு, தமிழகத்தின் பல கிராமங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக பெய்து வந்த மழையின் காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து மீண்டும் குறைந்துள்ளது. நேற்று 3,499 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 2,156 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 127.40 அடியாகவும், நீர் இருப்பு 4,136 மில்லியன் கன அடியாகவும் காணப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக குடிநீர் தேவைக்காக தற்போது 1,400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.