தமிழ்நாடு

கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு: வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு

webteam

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, காமராஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அணை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கல்லணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி, வெண்ணாற்றில் 4,750 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாயில் 1,300 கன அடியும் கொள்ளிடத்தில் 1,200 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதன் மூலம் 14 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.