புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வேர்ட்ஸ்வொர்த் அணைக்கட்டிலிருந்து பாதுகாப்பு காரணங்கள் கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் மாவட்டத்தில் ஓடும் முக்கிய காரணங்களில் ஒன்றான வெள்ளாற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனையடுத்து கடையக்குடி கிராமத்தில் அமைந்துள்ள வோர்ட்ஸ் வொர்த் அணைக்கட்டு தண்ணீர் வரத்து அதிகமானதால் அணையில் தண்ணீர் அளவு முழு கொள்ளளவை எட்டி வருகிறது.
தொடர்புடைய செய்தி: 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
இதனையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அணைக்கட்டிலிருந்து தொண்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனையடுத்து வெள்ளாற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.