தமிழ்நாடு

தீயை அணைக்க 10 லட்சம் லிட்டர் தண்ணீர்: தி.நகரில் குடிநீர் தட்டுப்பாடு!

தீயை அணைக்க 10 லட்சம் லிட்டர் தண்ணீர்: தி.நகரில் குடிநீர் தட்டுப்பாடு!

Rasus

சென்னை சில்க்ஸ் கட்டட தீ விபத்தை அணைப்பதற்காக 10 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டதால் சென்னை தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு சென்னை கே.கே.நகர் மற்றும் வள்ளுவர் கோட்டம் ஆகிய இடங்களில் உள்ள நீரேற்று நிலையங்களிலிருந்து 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 101 லாரிகளில் தண்ணீர் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், தீயணைப்பு நிலையம் மூலமாக ஐந்தாயிம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 14 லாரிகள் மூலமும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனால், சென்னை தியாகராயநகர், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 லட்சத்து 5 ஆயிரம் குடும்பத்தினருக்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டால் சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு தண்ணீரை விற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.