தமிழ்நாடு

புழல் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறப்பு- மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

கலிலுல்லா

தொடர் மழையின் காரணமாக புழல் ஏரி நிரம்பி வருவதால் விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே உள்ள ஏரிகள் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியின் மொத்த அடியான 21.20 அடியில் 19.40 அடியை நீர்மட்டம் எட்டியதையடுத்து, பொதுப்பணித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில், தற்போது 2900 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏரிக்கு 2200 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.