தமிழ்நாடு

அமராவதி அணையில் 1,500 கன அடி தண்ணீர் திறப்பு

அமராவதி அணையில் 1,500 கன அடி தண்ணீர் திறப்பு

webteam

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்‌கப்பட்டுள்ளது.

புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 31 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடும் நிகழ்வில் பங்கேற்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அமராவதி ஆறு, தாராபுரத்தின் வழியாக கரூரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் நிலையில் அமராவதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 41 சதவிகிதம் பதிவாகியிருப்பதாகவும், இது இயல்பைவிட 29 சதவிகிதம் கூடுதல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.