தமிழ்நாடு

சென்னையில் 507 இடங்களில் மின்மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றம் - ககன்தீப்சிங் பேடி

கலிலுல்லா

சென்னையில் 507 இடங்களில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை நீடித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரவு பெய்த கனமழை தற்போதுவரை நீடித்து வருகிறது. நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, நங்கநல்லூர், ஈக்காடுதாங்கல், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. முகப்பேர், சூளைமேடு, வியாசர்பாடி, பெரம்பூர், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயபுரம், திருவொற்றில் பகுதிகளிலும் இடி, மின்னலுயுடன் விடாமல் மழை பெய்கிறது.

தொடர் மழையால் சென்னையின் முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் 507 இடங்களில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.