தமிழ்நாடு

வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

Rasus

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கொடுமுடியாறு அணை உள்ளது. இந்த அணையின் நீர் மட்டம் 52.50 அடி ஆகும். ராதாபுரம், நாங்குநேரி தாலுகா பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியை மையமாக கொண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து, அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருவதால் இன்று இரவுக்குள் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.