தமிழ்நாடு

நீர்வரத்து உயர்வு: ஓகேனக்கலில் 39 ஆவது நாளாக குளிக்கத் தடை

webteam

காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கலில் 39 ஆவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.  பரிசல் இயக்கவும் 10 ஆவது நாளாக தடை நீடிக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து காவிரியில் விநாடிக்கு 67 ஆயிரத்து 930 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையளவு குறைந்துள்ளதால், தற்போது அணைகளிலிருந்து 21 ஆயிரத்து 725 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 

காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 19 ஆயிரம் கனஅடியிலிருந்து 21 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து சீராக உள்ளபோதே ஒகேனக்கலில் குளிக்க அனுமதிப்பதற்கு முன்பாக, சேதமடைந் துள்ள பாதுகாப்பு கம்பிகளை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 

தொடர்ந்து வருவாய், ஊரக வளர்ச்சித்துறை தமிழகத்திற்கு வரும் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர். காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.