தமிழ்நாடு

குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள்

குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள்

webteam

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிகின்றனர்.

நெல்லை மாவட்டம் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழையால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. அதனால் விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகமிருந்தது. அருவிகளில் அதிக கூட்டம் காணப்பட்டதால் மெயின் அருவி தடாகத்திற்கு கீழ் ஓடும் நீரில் குளிக்க, சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தொடர்ந்து வாகன நிறுத்த பகுதிகளிலும் இட நெருக்கடி ஏற்பட்டது.