தமிழ்நாடு

ஆட்டோ டிரைவருக்கு சிகிச்சை செய்த வாட்ச்மேன்: அதிர்ச்சி வீடியோ

ஆட்டோ டிரைவருக்கு சிகிச்சை செய்த வாட்ச்மேன்: அதிர்ச்சி வீடியோ

webteam

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவலாளி ஒருவர் சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் விபத்துக்குள்ளான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்நேரம் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநருக்கு செவிலியரும், காவலாளியும் இணைந்து சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் காவலாளி சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

விழுப்புரத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து பலர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அங்கு இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.