தமிழ்நாடு

சென்னை மேடவாக்கத்தில் குப்பைக் கழிவுகள்:பொதுமக்கள் அவதி

சென்னை மேடவாக்கத்தில் குப்பைக் கழிவுகள்:பொதுமக்கள் அவதி

webteam

சென்னை மேடவாக்கத்தின் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பைக் ‌கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால், கொசுக்கள் பரவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிள்ளனர். 

சென்னை பள்ளிகாரணை அடுத்த மேடவாக்கத்தில் கடந்த சில வாரங்களாக, ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளாததால் அந்தப் பகுதி  குப்பை மேடாக காட்சியளித்து வருகிறது. மேலும் மேடவாக்கம் செந்தமிழ் நகர், திருவீதி அம்மன் கோயில் தெருவின் சாலை ஓரத்தில் ஊராட்சியின் பெரிய குப்பைத் தொட்டி உள்ளது. இதிலிருக்கும் குப்பைகளை அள்ளாததால் இங்கு தேங்கியுள்ள குப்பைகளில் கொசு உற்பத்தியாகிறது. மேலும் இந்தக்  கொசுக்கள் அப்பகுதி மக்களை கடிப்பதினால் மர்ம காய்ச்சல் பலருக்கும் பரவியுள்ளது. இந்நிலையில் இந்த மர்ம காய்ச்சல் டெங்கு காய்ச்சலாக மாறுவதற்குள் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.