காவல் ஆய்வாளர் பிரவீன் முகநூல்
தமிழ்நாடு

சீமான் வீட்டில் சம்மன் விவகாரம்.. காவல் ஆய்வாளருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட்; என்ன காரணம்?

சீமான் வீட்டில் சம்மன் விவகாரம்... காவல் ஆய்வாளருக்கு வேறொரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்.

ஜெனிட்டா ரோஸ்லின்

சீமான் வீட்டில் கைது சம்பவத்தில் ஈடுபட்ட நீலாங்கரை ஆய்வாளர் பீரவீனுக்கு வேறொரு வழக்கில் வாரண்ட் வழங்கப்பட்டிருக்கிறது.

காவல்துறையினரின் அழைப்பாணையை ஏற்று வியாழன்கிழனை சீமான் ஆஜாராகாததால், வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகாததால் சீமானின் நீலாங்கரை வீட்டின் கதவில், காவல்துறையினர் வியாழன்கிழமை பிற்பகலில் சம்மன் ஒட்டியுனர். ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்டநிலையில், காவல்துறைக்கும் அவ்வீட்டின் காவல் ஆய்வாளர் பிரவீனுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

மேலும், சீமானுக்கு சம்மன் அனுப்ப சென்றபோது தங்களது வீட்டில் இருக்கும் முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக சீமானின் மனைவி கயல்விழி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், வேறொரு வழக்கில் காவல் ஆய்வாளர் பிரவீனுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கறிஞர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் பிரவீன் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக இவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.