அதீத வெப்பம் pt web
தமிழ்நாடு

கர்ப்பிணிகள், குழந்தைகள் வெளியே வரவேண்டாம்.. வெப்பம் அதிகரிக்கும் நிலையில் எச்சரிக்கை!

தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்...

Rishan Vengai

தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், பொது சுகாதாரத் துறை கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர் மற்றும் இணை நோயாளிகள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள தண்ணீர் பருகவும், குளிர்ந்த இடங்களில் ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் வெப்பம் அதிகரித்த வண்ணமே இருந்துவருகிறது. அதிலும் கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு அதிகப்படியான வெப்பம் பதிவாகும் எனவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

வெப்பம்

இந்தசூழலில் தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், மக்களுக்கு பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் வெளியே செல்ல வேண்டாம் எனவும், இணை நோய் உள்ளவர்களும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கும் சுகாதாரத் துறை

  • தண்ணீர் அதிகமாகப் பருக வேண்டும்.

  • அருகிலுள்ள குளிர்ந்த அல்லது நிழலான பகுதிக்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டும்.

  • குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். 

  • கால் தசைப்பிடிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தால், நோயாளி மயக்க நிலைக்குச் சென்றால், உடல் வெப்பநிலை 104°Fக்கு மேல் தொடர்ந்து இருந்தால் தாமதிக்காமல் 108 ஆம்புலன்ஸ் எண்ணையோ அல்லது மருத்துவமனைக்கோ செல்லவும். 

  • முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வெயிலில் வேலை செய்பவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் என்பதால் கூடுதல் கவனம் தேவை, எனவும் அறிவுறுத்தியுள்ளது.