தென் தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடல் சீற்றம் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் இருந்து வடதமிழகம் நோக்கி மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கடலோர பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக இன்று நள்ளிரவு வரை குளச்சல் மற்றும் தனுஷ்கோடி இடையே 4.6 மீட்டர் உயரத்திற்கு கடல் அலை எழும்பி சீற்றம் ஏற்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.