தமிழ்நாடு

பைக் வீலிங் செய்தவருக்கு வார்டு பாய் பணி ! - சென்னை உயர்நீதிமன்ற அதிரடி

Abinaya

சென்னை அண்ணா சாலையில் இரவு நேரத்தில் பைக்கில் சாகம் செய்த இளைஞர், நிபந்தனை ஜாமீன் அடிப்படையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வார்டு பாய்யாக பணி செய்தார்.

சென்னை அண்ணா சாலையில் கடந்த மாதம் 8ம் தேதி ஹைத்தரபாத்தை சேர்ந்த கோட்லாக் அலெக்ஸ் வினோ என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பரவியது.

இந்த வீடியோ தொடர்பாக அசோக்நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை 7 பேரை கைது செய்தனர். இவர்களில் கோட்லாக் அலெக்ஸ் வினோ ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.

இவரின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற, 3 வாரங்களுக்கு திங்கள்கிழமை காலை மாலை இருவேளைகளிலும், தேனாம்பேட்டை போக்குவரத்து சிக்னலில் சாலைவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு செய்ய வேண்டும் எனவும் மற்றும் செவ்வாய் முதல் கிழமைகளில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் வார்ட் பாய் பணி செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் விதித்து சென்னை உயர்நீதிமன்ற ஜாமீன் வழங்கியது.

இதனை தொடர்ந்து திங்கள் கிழமை தேனாம்பேட்டை சிக்னலில் விழிப்புணர்வு செய்ததோடு, செவ்வாய் கிழமை 8 மணிக்கு ராஜீவ் காந்தி அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் முன்னிலையில் ஆஜரான வினோவுக்கு வார்ட் பாய் வேலை கொடுக்கப்பட்டது.