தமிழ்நாடு

“6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை” – அமைச்சர் காலில் விழுந்த தூய்மைப் பணியாளர்கள்

Veeramani

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனின் காலில் விழுந்து தங்களுக்கு நிறுத்தப்பட்ட ஊதியத்தை வழங்க கோரி ஆரம்ப சுகாதார நிலைய தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆறாவது சிறப்பு தடுப்பூசி முகாம் குறித்து ஆய்வு செய்ய மருத்துவத் துறை அமைச்சர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொடிக்கால் பாளையத்தில் அமைந்துள்ள அரசு நகர்ப்புற மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மைப்பணியாளர் பணி வாய்ப்பு பெற்ற கைம்பெண்கள், தற்போது தங்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் காலில் விழுந்து கண்ணீர் மல்க அழுது மனு கொடுத்து கோரிக்கை வைத்தார்கள்.

2001 ஆம் ஆண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக கணவனை இழந்த கைம்பெண்கள் 20 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு பணியாளர் பணி வழங்கப்பட்டது. 500 ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்த அவர்களுக்கு தற்போது 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.