செய்தியாளர்: கே.ஆர்.ராஜா
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பூதாமூர் பூந்தோட்டம் பகுதியில் வசிப்பவர்; சக்திவேல். இவர், என்எல்சி இரண்டாவது சுரங்கப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சிவராத்திரியை முன்னிட்டு நேற்றிரவு அருகில் உள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு அரை மணி நேரத்தில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த 30 சவர தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் 2.5 லட்சம் ரொக்கம் கொள்ளைபோனது தெரியவந்தது. இதையடுத்து அவர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த் விருத்தாசலம் காவல்துறையினர், இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.