தமிழ்நாடு

மாறி வந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் : சிக்கலில் பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை

webteam

வடசென்னைக்கு செல்ல வேண்டிய வாக்கு எந்திரம் பெரம்பூர் வாக்கு மையத்திற்கு மாறி வந்தததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. 

பெரம்பூர் இடைத்தேர்தல், மற்றும் வடசென்னை மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்று வருகிறது. வடசென்னை மக்களவை தொகுதி தனியாகவும் பெரம்பூர் இடைத்தேர்தல் தொகுதிக்கு தனியாகவும் நடைபெற்று வருகிறது. பெரம்பூர் இடைத்தேர்தலுக்கான நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் அதற்காக வாக்கு எண்ணிக்கை எந்திரத்தை திறக்கும்போது அது வடசென்னை வாக்கு எந்திரமாக இருந்ததை கண்டு வேட்பாளர்களும் முகவர்களும் அதிர்ச்சியடைந்தனர். அதவாது வடசென்னைக்கு போகவேண்டிய இரண்டு வாக்கு எந்திரம் பெரம்பூர் வாக்கு மையத்திற்கு வந்துள்ளது.

உடனடியாக முகவர்களும் வேட்பாளர்களும் வாக்கு எந்திரம் மாறி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் வாக்கு எண்ணிக்கை தொடரக்கூடாது எனவும் இரண்டு வாக்கு எந்திரங்கள் மாற்றப்பட்டிருக்கிறது எனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 15 நிமிடங்கள் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து முகவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பாதுகாப்பிற்காக அதிக போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.