சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வென்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, காலியாக உள்ள 7 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இல்லாத தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை கடந்த மாதம் அறிவித்தது தேர்தல் ஆணையம்.
இந்தச்சூழலில் தான், தமிழ்நாட்டில் இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்தச்சூழலில் தான், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கிறது. மேலும், இந்த 2 தொகுதிகளுடன் சேர்த்து இந்தியா முழுவதும் 5 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 மக்களவை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.
முன்னதாக, பொதுத்தேர்தலின்போது, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் 93.22% வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் சுமார், 89.89% வாக்குகளும் பதிவாகியிருந்தது. இந்தச்சூழலில் தான், இன்று நடைபெற்ற தேர்தலுக்கான 6 மணி நிலவரம் வெளியாகியிருக்கிறது. அதன்படி, மதுராந்தகம் தொகுதியில், 85.88 சதவீத வாக்குகளும் தாராபுரம் தொகுதியில், 80.31 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.