தமிழ்நாடு

ரஜினி ரசிகர்களுக்கு எச்சரிக்கை

ரஜினி ரசிகர்களுக்கு எச்சரிக்கை

webteam

மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ரஜினி ரசிகர்கள் பேட்டிதரக்கூடாது என ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைக்காட்சிகளில் பேட்டி, விவாதம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ரஜினி ரசிகர்கள் தவிர்க்க வேண்டும். 
ரஜினி ரசிகர்கள் மன்ற தலைமையில் ஒப்புதல் இல்லாமல் பேட்டி தரக்கூடாது. ரஜினி ரசிகர் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சைதை ரவி நீக்கப்பட்டுள்ளார். மன்ற கட்டுப்பாடு, ஒழுக்கத்திற்கும் குந்தகம் விளைவித்ததால் ரவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருடன் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அவர் அறிவித்துள்ளார்.