சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் போயஸ் கார்டன் சொத்துக்குகள் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு எதிரே உள்ள 10 கிரவுண்ட் இடம் சசிகலாவுக்கு சொந்தமானது எனப்பட்டது. அத்துடன் அந்த இடத்தில் புதிய இல்லம் ஒன்றை அவர் கட்டி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ரூ.300 கோடி மதிப்புள்ள அந்த சொத்துக்குள் அனைத்தையும் வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். வருமான வரித்துறையின் பினாமி தடுப்புப் பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியாகவுள்ளார் என்றும், ஜெயலலிதா இல்லம் போலவே ஒரு இல்லத்தை போயஸ் கார்டனில் கட்டுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகிய நிலையில், வருமான வரித்துறையினர் இந்த நடவடிக்கை பாய்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.