தருமபுரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் ஒருவர் பிச்சைக்காரர் வேடமிட்டு விழிப்புணர்வு செய்தார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எச்சனஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு முனிஆறுமுகம் என்பவர் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்திருந்தார். நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய நினைத்த அவர், நல்லம்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து பிச்சைக்காரர் போல வேடம் போட்டு கொண்டு வந்தார். அத்துடன் கையில் திருவோடும் ஏந்திவாரு வந்து மனு தாக்கல் செய்தார்.
பின்னர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய தேவையான பணத்தை அங்கிருந்த பொதுமக்களிடம் பிச்சையாக கேட்டு பெற்றார். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு வாக்களிக்கக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு செய்யும் நோக்கத்தில் இப்படி செய்ததாக அவர் கூறினார்.