நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தவர்கள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் என்று நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரியலூர் அனிதா தற்கொலை செய்துகொண்டது குறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டதை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். அனிதா, தான் பாதிக்கப்பட்டது போல் மற்ற மாணவ மாணவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நீதிமன்றப் படிகளில் ஏறிப் போராடியவர். 196.5 கட்-ஆஃப் பெற்றும் கூட அனிதா மருத்துவக் கல்விக்கு தகுதி பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பதிலாக நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தவர்கள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், “மக்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வார்கள் அல்லது மறந்துவிடுவார்கள் என்ற அலட்சியத்தில் இருக்கிற ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும். இனி தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்காத வகையில் ஆட்சியாளர்கள் சட்டம் இயற்ற வேண்டும். இப்படி நீட் தேர்வு குழறுபடிகளால் பாதிக்கப்பட்ட தம்பி தங்கைகளுக்கு நான் வைக்கிற கோரிக்கை, இதுபோன்ற தவறான முடிவு எடுக்காதீர்கள். ஒரு சகோதரனாக உங்களுடைய கல்வி உதவத் தயாரக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.