தமிழ்நாடு

சதுரகிரியில் மாவோயிஸ்ட் ஊடுருவல்? - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சதுரகிரியில் மாவோயிஸ்ட் ஊடுருவல்? - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

webteam

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மாவோயிஸ்ட் ஊடுருவலை துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்தக் கோயில் தரைமட்டத்திலிருந்து சுமார் 4ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது. ஆடி அமாவாசை திருவிழா நாளை நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாவோயிஸ்டுகள் ஊடுருவதை தடுக்கும் விதமாக முதன்முறையாக 40க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.