தமிழ்நாடு

கல்லூரி படிப்பைத் தொடர முடியாமல் தவித்த மாணவி... உதவிக்கரம் நீட்டிய பாரிவேந்தர்!

webteam

கல்லூரி நிர்வாகத்தின் குளறுபடியால் படிப்படைத் தொடர வழியின்றித் தவித்ததோடு கூலி வேலை செய்து வரும் மாணவிக்கு, நாடாளுமன்ற உறுப்பினரும், எஸ்.ஆர்.எம் குழுத் தலைவருமான பாரிவேந்தர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

கடலூரைச் சேர்ந்த சத்தியாதேவி என்ற மாணவி 12ஆம் வகுப்பில் 382 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். விவசாயம் சார்ந்து மேற்படிப்பு பயில விரும்பி அவருக்கு, ஈரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவு கிடைத்தது. சுமார் 29 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி கல்லூரியில் சேர்ந்த சத்தியாதேவி, சேர்க்கையில் நடைபெற்ற குளறுபடிகளால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

வேறு கல்லூரியில் சேர வழியில்லாததால் படிப்பைக் கைவிட்ட சத்தியாதேவி, பெற்றோருடன் கூலி வேலைக்குச் சென்றிருக்கிறார். இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பாரிவேந்தர், சத்தியாதேவியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மாணவி விவசாயம் பயில எஸ்.ஆர்.எம் கல்லூரியிலேயே இடம் வழங்கியதோடு மட்டுமின்றி, 3 ஆண்டுக்கான கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம், உணவுக் கட்டணத்தையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.