தமிழ்நாடு

விஐபி, விவிஐபி அத்திவரதர் தரிசனம் தற்காலிக நிறுத்தம்

webteam

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், 39 ஆம் நாளான‌ இன்று அத்திவரதர் தரிசனம் 2 மணிநேரம் தாமதமாக தொடங்கியது. பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால், விஐபி, விவிஐபி தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது. 

அத்திவரதர் வைபவத்தில் மேற்கு கோபுரத்தின் இடதுபுறம் வழியாக வெளியேறும் பக்தர்களை அனுப்ப மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 8 அடி உயரத்தில் மேம்பால‌ம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் விஐபி, விவிஐபி தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று கோயி‌ல் நடை 2 மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டதால், அத்திவரதரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். 

மேலும், பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்த பிறகே விஐபி, விவிஐபி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று விஐபி தரிசன வரிசையில் மின்சாரம் தாக்கி பக்தர்கள் சிலர் காயமடைந்ததையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.