தமிழ்நாடு

"வன்முறையாக மாறிய போராட்டம்" - கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை உத்தரவு

kaleelrahman

தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறியதால் கள்ளக்குறிச்சி தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மாணவியின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்து தீவைத்தனர். இதனால் பள்ளி பேருந்துகள் கொழுந்துவிட்டு எரிந்தது.

இதையடுத்து போராட்டம் தீவரமடைந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தினர். இதைத் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபடுபவர்கள்; அமைதிகாக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைதி நடவடிக்கை தொடர்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

<iframe width="716" height="403" src="https://www.youtube.com/embed/rchkhn16e-A" title="#breaking|  கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>