தமிழ்நாடு

விநாயகர் சிலை ஊர்வலத்தில் வன்முறை; காவல்துறையினர் தடியடி

விநாயகர் சிலை ஊர்வலத்தில் வன்முறை; காவல்துறையினர் தடியடி

webteam

திருவண்ணாமலையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 

விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட சிலைகள் திருவண்ணாமலை தாமரை குளத்தில் கரைப்பதற்காக ஊர்வலகமாக எடுத்துச்செல்லப்பட்டன. காந்தி சிலை, காமராஜர் சிலை அருகே ஊர்வலம் சென்ற போது திடீரென கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்களும், கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி பதில் தாக்குல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து கடைகள் அடைக்கப்பட்டன.