விநாயகர் சதுர்த்தி நாளில் நடுத்தெருவில் பிள்ளையாரை நிறுத்திவிட்டு சென்ற சம்பவம் அரக்கோணம் அருகே நடந்துள்ளது. இருபிரிவினரின் சண்டையால் பிள்ளையார் பரிதவித்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்வேட்டங்குலம் கிராமத்தில் இருபிரிவினர் இணைந்து விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ஒரு பிரிவினர், தனியாக சிலை வைத்து வழிபட முடிவெடுத்து பெரிய சிலையை வாங்கி வந்துள்ளனர். ஆனால், மற்றொரு தரப்பு பிள்ளையார் சிலையை ஊருக்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்ததால், பிள்ளையாரை நடுத்தெருவில் வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
தகவல் அறிந்துவந்த வருவாய் துறையினர் மற்றும் நெமிலி காவல்துறையினர், கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். ஆசாமிகள் சண்டையில் நடுத்தெருவில் விடப்பட்ட சாமி சிலை அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.