தமிழ்நாடு

ஆற்றில் மூழ்கி மாணவன் மரணம்: சடலத்துடன் உறவினர்கள் மறியல்

ஆற்றில் மூழ்கி மாணவன் மரணம்: சடலத்துடன் உறவினர்கள் மறியல்

webteam

விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் நேற்று மூழ்கிய பள்ளி மாணவனின் உடல் இன்று கரை ஒதுங்கியது. 

விழுப்புரம் அருகே உள்ள கரடிப்பாக்கம் கிராமம் வழியாக ஓடும் தென்பெண்ணை ஆற்றில் நேற்று காலை சில மாணவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் குளித்துக்கொண்டிருந்த எட்டாம் வகுப்பு படிக்கும் தரனிதரன் என்ற மாணவன், மணல் குவாரி அமைத்து மணல் அள்ளிய பள்ளத்தில் சிக்கி மூழ்கினார். பின்னர் தகவல் அறிந்து வந்த ஊர்மக்கள், நேற்று முதல் தேடியும் உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் உடல் கரை ஒதுங்கியது. இதனைத்தொடர்ந்து தீயனைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் வராததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு மறியல் செய்தவர்களை கலத்தனர்.