நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியால் விழுப்புரத்தை சேர்ந்த மாணவி தற்கொலை செய்ய முயன்றார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் சேஷாங்கனூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராதாகிருஷ்ணன். இவரது மகள் அஷ்டலட்சுமி. பன்னிரெண்டாம் வகுப்பில் 732 மதிப்பெண் எடுத்த அஷ்டலட்சுமி நீட் தேர்வு எழுதினார். அதில் 8 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் விஷம் குடித்த அஷ்டலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் பெருவள்ளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா, திருச்சியைச் சேர்ந்த சுபஸ்ரீ, ஐதராபாத்தைச் சேர்ந்த மாணவி மற்றும் டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.
(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)