கொலை file image
தமிழ்நாடு

விழுப்புரம்: மதுவில் விஷம் கொடுத்து கணவர் கொலை... மனைவி கைது! வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!

விழுப்புரத்தில் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த மனைவியை கணவர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அந்த காதலருடன் சேர்ந்து மதுவில் சயனைடு கலந்து கொடுத்து கணவரை கொலை செய்துள்ளார் மனைவி. இதில் நான்கு பேரை தாலுக்கா போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

PT WEB

செய்தியாளர்: காமராஜ்

விழுப்புரத்தில் கடந்த 14 ஆம் தேதி இந்திரா நகர் சாலையோரம் மதுபோதையில் வீ.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த கொத்தனாரான மணிகண்டன் இறந்து கிடந்தார். இவரது உடலை கைப்பற்றி விழுப்புரம் தாலுகா போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்தனர்.

முதலில் அளவிற்கு அதிமமான மது குடித்ததினால் இறந்து இறப்பார் என போலீசார் கருதிய நிலையில் மணிகண்டனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சயனைடு கலந்த மது அருந்தியதால் மணிகண்டன் உயிரிழந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இவ்வழக்கை தாலுக்கா போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து மணிகண்டனின் மனைவியிடம் விசாரனை செய்ததனர். விசாரனையில் கொத்தானரான மணிகண்டனின் மனைவி தமிழரசிக்கும் சென்னையை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் நீண்ட நாட்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களின் உறவு சென்னையில் வசிக்கும் போதே இருந்ததால் மனைவியை கண்டித்த கணவர் மணிகண்டன், அதன் பின்னர் சொந்த கிராமமான  வீ.சாத்தமூருக்கு கொத்தனார் வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இருப்பினும் கணவர் வேலைக்கு சென்ற பிறகு தமிழரசி மீண்டும் சங்கருடன் தொடர்பில் இருந்தாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழரசியை மீண்டும் மணிகண்டன்  கண்டித்ததால், சங்கருடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ய தமிழரசி திட்டமிட்டுள்ளார். சங்கரின் நண்பரணான கார்த்திக்ராஜா மற்றும் சீனுவாசன் ஆகியோரையும் இதில் இணைத்து, மணிகண்டனை கொலை செய்ய அனைவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.

அந்த திட்டத்தின் மூலம் கடந்த 14 ஆம் தேதி மணிகண்டனிடம் தொலைபேசியில் பேசிய கார்த்திக் ராஜாவின் மனைவி சுவேதா என்பவர், “கட்டட வேலை உள்ளது, நான் சொல்லும் இடத்துக்கு வாருங்கள்” என அவரை இந்திரா நகருக்கு வரவழைத்துள்ளார். இந்திரா நகருக்கு வந்த மணிகண்டனுடன் கார்த்திக்ராஜா, சீனுவாசன் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். மது அருந்தும்போது சயனைடு கலந்த மதுவை மணிகண்டன் பருக செய்துள்ளனர்.

முழுக்க மது அருந்திய மணிகண்டன் இந்திரா நகர்  தேசிய நெடுஞ்சாலையான சர்வீஸ் சாலையோராம் மயங்கி விழுந்தவுடன் இறந்ததை உறுதிபடுத்தி விட்டு அங்கிருந்து குற்றவாளிகள் சென்றுள்ளனர். அதன் பின்னர் தமிழரசி மற்றும் சங்கருக்கு மணிகண்டன் இறந்துவிட்டதை தெரிவித்தது விசாரனையில் தெரியவந்தது.

இதனையடுத்து குற்றவாளிகளான இறந்த கொத்தனாரின் மனைவி தமிழரசி, சென்னையை சேர்ந்த சங்கர், சீனுவாசன், சுவேதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய கார்த்திக் ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.