தமிழ்நாடு

சமூக சேவை பணிக்கு டாக்டர் பட்டம் பெற்ற திருநங்கை - மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு

சங்கீதா

சமூக சேவை பணிக்கு டாக்டர் பட்டம் பெற்ற விழுப்புரம் திருநங்கைக்கு குதிரை வண்டியில் ஊர்வலமாக மேளதாளத்துடன் திருநங்கைகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்ட திருநங்கைகளின் நாயக்கராக இருப்பவர் விமலா. 55 வயதான இவர் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட நாயக் (திருநங்கை) விமலாவின் சமூகசேவை பணிக்காக, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள "குலோபல் ஹியூமன் பீஸ்ஸ் பல்கலைகழகம்" சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டம் பெற்று விழுப்புரம் வருகை தந்த திருநங்கை விமலாவிற்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் மாலை அணிவித்து குதிரை வண்டியில் அமர வைத்து மேளதாளத்துடன் நடனமாடி ஊர்வலமாக வரவேற்பளித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.