ED Raid pt desk
தமிழ்நாடு

விழுப்புரம் | MGM நிறுவன மதுபான ஆலையில் இரண்டாவது நாளாக தொடரும் ED அதிகாரிகளின் சோதனை!

விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம் நிறுவனத்திற்குச் சொந்தமான மதுபான ஆலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: காமராஜ்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலைகளிலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களின் வீடுகள் மற்றும் சென்னை டாஸ்மாக் தலைமையகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் வழுதரெட்டியில உள்ள எம்ஜிஎம் நிறுவனத்திற்குச் சொந்தமான மதுபான ஆலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையை தொடங்கினர். நள்ளிரவிலும் சோதனை நடைபெற்று வந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரகள் சோதனை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்திற்கு வழங்கிய மதுபான பாட்டில்கள் எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆவணங்களை கைபற்றி டாஸ்மாக் நிறுவனத்திற்கு வழங்கிய மதுபாட்டில்களில் முறைகேடாக சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடத்திருக்கலாம் என்ற அடிப்படையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.