தமிழ்நாடு

6 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு - விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

webteam
ஆறு வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது விழுப்புரம் போக்சோ நீதிமன்றம்.
கடந்த 26.12.2018ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆறு வயது குழந்தைக்கு பாலில் தொந்தரவு கொடுத்த திருக்கோவிலூர் வட்டம், அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த நடராஜன்(73) என்பவர் மீது உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் POCSO சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட புலன் விசாரணை முடித்து, எதிரியின் மீது இறுதியறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று 27.09.2022-ந் தேதி விழுப்புரம் POCSO நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி தனது தீர்ப்பில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் 
நடராஜன் குற்றவாளி என்று உறுதி செய்து, ஆயுள் தண்டனையும் மற்றும் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், நீதிமன்ற காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பகலவன்  பாராட்டுகளை தெரிவித்தார்.