கடலூர் மாவட்டம் செம்பேரி கிராமத்தில் வெள்ளாற்றில் மணல் அள்ள வந்தவர்களை சிறைபிடித்த கிராம மக்கள், அவர்களை தோப்புக்கரணம் போட வைத்தனர்.
அரியலூர் மாவட்டத்திலிருந்து நாள்தோறும் 100-க்கும் அதிகமான மாட்டுவண்டிகளில் வந்து வெள்ளாற்றில் மணல் அள்ளி செல்வதாக புகார் கூறப்பட்டு வந்தது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், இன்று காலை மணல் அள்ள வந்த 30-க்கும் அதிகமான மாட்டுவண்டிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர். பின்னர், அவர்களை தோப்புக்கரணம் போடவைத்த கிராம மக்கள், மணல் அள்ளினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். அதனால் இனி மணல் அள்ள மாட்டோம் என்றும் அவர்களை கிராம மக்கள் கூற வைத்தனர்.