தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்கள் விடிய விடிய போராட்டம்

Rasus

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தாமிர உருக்காலையை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையின் அருகில் உள்ள அ.குமரெட்டியார்புரம் கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட மக்கள் எம்.ஜி.ஆர் பூங்கா முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

‌போராட்டக்காரர்களுடன் மாவட்ட சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஸ்டெர்லைட் விரிவாக்க பணியை தடுத்து நிறுத்த வேண்டும், ஆலையை மூட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் காவல்துறையின் பாதுகாப்புடன் இரவிலும் போராட்டம் தொடர்ந்தது.