தமிழ்நாடு

கடலூர்: வெள்ள நிவாரணம் வழங்கியதில் ஊழல்; வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்

கடலூர்: வெள்ள நிவாரணம் வழங்கியதில் ஊழல்; வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்

JustinDurai
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாச்சேரியில் வெள்ள நிவாரணத்தில் ஊழல் செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கொத்தவாச்சேரி கிராமத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நிவாரணம் வழங்கியபோது முறைகேடு செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் சந்தான கிருஷ்ணன் மீது புகார் எழுந்தது. இது உறுதியானதை அடுத்து சந்தான கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் பணிபுரிந்து வந்த வடக்குத்து கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியிடை நீக்க ஆணை ஒட்டப்பட்டு அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.