தமிழ்நாடு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு

Rasus

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 14-ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என பலரின் அஞ்சலியோடு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை செயலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதேபோல நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியும் ஏற்கெனவே காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தொகுதி எம்எல்ஏ வசந்தகுமார், கன்னியாகுமரி எம்.பி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.