தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி: விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி: விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர்

கலிலுல்லா

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 169 இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். இதனால் விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலத்தில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ரகசியமாக நடைபெற்றதாக தகவல் வெளியானது.

வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு விஜய் சால்வை அணிவித்து வாழ்த்தினார். கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் எதுவும் வெளியில் தெரிவிக்கப்படவில்லை. மக்களுக்காக நன்றாக உழைத்து, அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்று விஜய் பேசியதாக தெரிகிறது. இந்நிலையில் இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், 129 பேர் கொண்ட பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.