பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான கேலிச் சித்திரத்தை வெளியிட்ட காரணத்தால், விகடன் இதழின் இணையதளம் முடக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், இணையதளம் முடக்கப்பட்டதற்கான அறிவிப்பை, மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
தொலைத் தொடர்புத் துறைக்கு பரிந்துரை செய்து, விகடன் இணையதள பக்கத்தை முடக்கி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.