தமிழ்நாடு

விஜயகாந்துக்கு கொரோனா: ஸ்டிக்கர் ஒட்ட வந்த மாநகராட்சியினருக்கு பணியாளர்கள் எதிர்ப்பு

விஜயகாந்துக்கு கொரோனா: ஸ்டிக்கர் ஒட்ட வந்த மாநகராட்சியினருக்கு பணியாளர்கள் எதிர்ப்பு

webteam

கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட வீடாக அறிவித்து ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு விஜயகாந்த் வீட்டு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த செப்.22ஆம் தேதி முதல் கொரோனா தொற்றால் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பாதிக்கப்பட்டுள்ளதாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை செய்தி குறிப்பு வெளியிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து சென்னை சாலிகிராமம் கண்ணம்மாள் தெருவில் 54ஆம் எண் கொண்ட விஜயகாந்த் இல்லத்தை தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக அறிவிக்கும் விதத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக மாநகராட்சி பணியாளர்கள் அங்கு சென்றனர்.

அப்போது, விஜயகாந்த் இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டாம் எனவும் சிறிது நேரம் காத்திருங்கள் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் விஜயகாந்த் வீட்டின் பணியாளர் தனது செல்போனை ஸ்டிக்கரை ஒட்ட வந்த பணியாளரிடம் கொடுத்து பேச சொல்லியுள்ளார். செல்போனில் பேசிய பின் ஸ்டிக்கர் ஒட்ட வந்த மாநகராட்சி பணியாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டாமல் திரும்பி சென்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்தை தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக அறிவிக்க வேண்டும் என்பது அரசின் சட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.