தமிழ்நாடு

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது; வதந்திகளை நம்ப வேண்டாம் - தேமுதிக

JustinDurai

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று  தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது. விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று  தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாகவும் தேமுதிக தெரிவித்துள்ளது. மேலும், சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக கூறியுள்ளது.