ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி யாருக்கும் இடையூறு தராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிவாசல் திறக்கும்வரை வீடு வாசல் திரும்ப மாட்டோம் என கடந்த 6 நாள்களுக்கு மேலாக கடும் குளிரையும், வெயிலையும் பொருட்படுத்தாமல், தன்னெழுச்சியாகப் போராடி வரும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் எனப் பலருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் கண்ணியத்துடனும், அறவழியிலும், யாருக்கும் இடையூறு தராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.