தமிழ்நாடு

ஒட்டகப் போட்டி நடக்கிறது.... ஜல்லிக்கட்டுக்கு தடையா? விஜயகாந்த் கேள்வி

ஒட்டகப் போட்டி நடக்கிறது.... ஜல்லிக்கட்டுக்கு தடையா? விஜயகாந்த் கேள்வி

webteam

கேரளாவில் யானைகளையும், வட மாநிலங்களில் ஓட்டகங்களையும் வைத்து போட்‌டிகள் நடத்தப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பது ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தேமுதிக சார்பில் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய விஜயகாந்த், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். கேரளாவில் யானைகளையும், வட மாநிலங்களில் ஓட்டகங்களையும் வைத்து போட்‌டிகள் நடத்தப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பது ஏன் என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். ஜல்லிக்கட்டு மீது தடை விதிக்கக் காரணமாக இருந்த பீட்டா அமைப்புக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி தலைவராய் இருப்பதாகக் குறிப்பிட்ட விஜயகாந்த், அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தின் போது, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடைவிதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.