தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வரவேண்டிய அவசியமில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்திடம் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த விஜயகாந்த், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.