தமிழ்நாடு

கடல் என்ன கிணறா? விஜயகாந்த் கேள்வி

கடல் என்ன கிணறா? விஜயகாந்த் கேள்வி

webteam

எண்ணெய் கழிவுகளை வாளியில் அகற்றுவதற்கு கடல் என்ன கிணறா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

எண்ணெய்ப் படலமாக காட்சியளிக்கும் எண்ணூர் கடற்பகுதிக்கு விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் சென்றார். அப்போது, கடலில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டதோடு, எண்ணெய் கழிவு அகற்றப்படுவது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணூரில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி மிக மெதுவாக நடைபெற்று வருகிறது என குற்றம்சாட்டினார். மேலும், கழிவுகளை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள நவீன இயந்திரங்கள் வாங்க வேண்டும் என வலியுறுத்தினார்.