விஜயகாந்த்
விஜயகாந்த் pt web
தமிழ்நாடு

’மீண்டு வாருங்கள் கேப்டன்’ - உடல்நிலை சீராக இல்லை; விஜயகாந்துக்கு நுரையீரல் சிகிச்சை!

PT WEB

கடந்த 18ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரமாக கண்காணித்ததில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விஜயகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புவதாகவும் மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அதே சமயம் இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து விஜயகாந்திற்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதாகவும் மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகந்தாஸ் தெரிவித்துள்ளார்.